R.Maheshwary / 2022 மார்ச் 23 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
நுவரெலியா மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக் கிழங்கு மற்றும் மக்கறிகளை விற்பனை செய்துக் கொள்ள முடியாமல் விவசாயிகளும் மரக்கறி வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகளும் வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.
டீசல் தட்டுபாட்டால் வெளிமாவட்டத்திலுள்ள வியாபாரிகள் மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருவதில்லை. இதனால் மரக்கறி விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதேவேளை மரக்கறி உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளும் உற்பத்தி செய்யும் மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் அவஸ்தைபடுகின்றனர்.
அத்தோடு மரக்கறி தோட்டங்களிலும் மரக்கறி வியாபாரிகளிடம் தொழில்புரியும் தொழிலாளர்களும் தொழில் இல்லாமல் கஸ்டப்படுகின்றனர்.
இது இவ்வாறிருக்க தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிப்பொருள் தட்டுபாடு மற்றும் சமையல் எரிவாயு நெருக்கடி காரணமாக மரக்கறி உற்பத்தியாளர்களும் மரக்கறி வியாபாரிகளும் 60 வீதத்தால் வீழ்ச்சியடைந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமையல் எரிவாயுதட்டுபாடு காரணமாக பல இடங்களில் உணவங்களும் ஹோட்டல்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் சந்தைக்கு காய்கறிகளை கொள்வனவு செய்வதற்க்கு ஹோட்டல் துறைசார்ந்தவர்கள் வருவதில்லை. இதனால் மரக்கறி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026