2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

மரக்கிளையால் மாணவன் மரணம்

Editorial   / 2024 பெப்ரவரி 05 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிகை அலங்கார கடைக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, மரக்கிளை முறிந்து, விழுந்ததில் அதில் சிக்குண்ட மாணவன், பரிதாபமாக மரணமடைந்த சம்பவமொன்று நோர்வூட் பொலிஸ் பிரிவில் சனிக்கிழமை (03)  மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

  நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி பயின்று வரும்  நியூட்டன் தோட்டத்தைச் சேர்ந்த முருகன் அஷால் (வயது 14)  என்ற மாணவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து அவர், டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொண்டு செல்லப்படும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுது்து அம்மாணவனின் உடலம் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடற் கூற்று பரிசோதனை, சிறுவனின் தந்தை முருகன் முன்னிலையில் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மேற்கொள்ள உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செ.தி.பெருமாள்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X