Freelancer / 2022 பெப்ரவரி 22 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் மரமொன்றின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்த போது அதன் கிளை உடைந்து வீதியில் சென்ற ஆசிரியர் ஒருவரின் உயிரை பறித்த சம்பவத்தில் கைதானவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்கள் உட்பட ஐவரை லிந்துலை பொலிஸார் இன்று (22) கைது செய்திருந்தனர்.
தலவாக்கலை லோகி மல்லியப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், ஆலமரத்தினை வெட்டிய நானுஓயா பகுதியைச் சேர்ந்த இருவர் மற்றும் மரம் வெட்டுவதற்கு ஒப்பந்தம் பெற்ற நுவரெலியா பகுதியைச் சேர்ந்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (22) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சந்தேக நபர்களை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (21) திங்கட்கிழமை மாலை ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் லோகி தோட்ட பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையிலிருந்த 200 வருட பழமை வாய்ந்த ஆல மரமொன்றின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தபோது அதன் கிளையொன்று உடைந்து வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில் அதை செலுத்திய நபர் உயிரிழந்தார்.
தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்தவரும், தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலையின் கணித ஆசிரியருமான வேலுசாமி மகேஸ்வரன் (வயது 39) என்பவரே இதில் உயிரிழந்தார்.
இதன்போது காயமடைந்த நபரை முச்சக்கரவண்டியொன்றில் லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
அதே மோட்டார் சைக்கிளில் பயணித்த இன்னொரு நபர் (ஆசிரியர்) பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவத்தின் போது வீதியில் சென்ற முச்சக்கர வண்டியொன்றும் பலத்த சேதமடைந்தது.
குறித்த மரத்தின் கிளைகளை வெட்டுவதற்கு வனவளத் திணைக்களத்தின் அனுமதியை பெற்று வெட்டியபோதும் உரிய பாதுகாப்பின்றி மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டதாகவும், தலவாக்கலை நகரை அண்மித்த ஒரு பகுதியில் பாரிய மரம் ஒன்றை வெட்டுவதாக இருந்தால் அதற்கான சில ஒழுங்கு விதிகளை பின்பற்றி இருக்கவேண்டும்.
பொதுவாக பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள மரங்களை வெட்டுவதாக இருந்தால் பெயர் பலகைகள் வைக்கப்பட்டு சாரதிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
இரு பக்கங்களிலும் வாகனத்தை நிறுத்தி சரியான முறையில் போக்குவரத்தை செய்வதற்கு ஊழியர்கள் மூலமாக வழிகாட்டல்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் எவ்வித பாதுகாப்பு நடைமுறையும் பின்பற்றாமல் ஒரு பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்றை வெட்டியதால் உயிர் ஒன்றை அநியாயமாக இழக்கச் செய்துவிட்டதாக தெரிவித்து பிரதேச மக்கள் சம்பவ இடத்தில் வீதியை மறித்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
200 வருடம் பழைமை வாய்ந்த மரத்தினை வெட்ட அனுமதி கொடுத்தது யார்? பிரதான வீதியில் நூற்றுக் கணக்கான வாகனங்கள் செல்லும்போது பிரதான வீதிக்கு அருகாமையில் இருக்கும் இந்த மரத்தின் கிளைகளை வெட்டும்போது வீதியில் பயணித்த வாகனங்களுக்கும் பொது மக்களுக்கும் எந்தவித பாதுகாப்பு முன் எச்சரிக்கைகளும் வழங்கப்படவில்லை.
அத்துடன் இரு மறுங்கிலும் வாகனங்கள் சென்றுக்கொண்டு இருக்கும்போது உரிய பாதுகாப்பு வழங்காமல் மரத்தினை வெட்ட அனுமதி வழங்கியது யார்?
இதனால் இன்று ஒரு அப்பாவி உயிர் போய்விட்டதே போன்ற கோசங்களை எழுப்பியவாறும் இந்த உயிரிழப்புக்கு நீதி வேண்டியும் ஹட்டன் தலவாக்கலை பிரதான வீதியை மறித்து மக்கள் சுமார் 4 மணித்தியாலங்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனால் ஹட்டன் தலவாக்கலை பிரதான வீதியில் சுமார் 4 மணித்தியாலங்கள் போக்குவரத்து தடைப்பட்டது.
சுமார் 4 மணித்தியாலங்கள் வரை தொடர்ந்து வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களிடம் தலவாக்கலை மற்றும் லிந்துலை பொலிஸார் இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது. (R)
5 minute ago
14 minute ago
20 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
20 minute ago
26 minute ago