Editorial / 2022 ஜூன் 14 , பி.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் இன்று (14) செவ்வாய்கிழமை மாலை வெட்டி வீழ்த்தப்பட்ட மரமொன்றை, குற்றிகளாக வெட்டிக் கொண்டிருந்த நபரொருவர், மரக்குற்றியொன்று அந்நபரின் நெஞ்சு பகுதியில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தைச் சேர்ந்த செல்லதுரை மணிமாறன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (14) செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. ஹேலீஸ் பிளான்டேசன் பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் மரம் வெட்டப்படுகின்றது.
அதில் குறித்த தொழிலாளியும் மற்றொரு தொழிலாளியும் நேற்றைய தினம் ஸ்கல்பா தோட்டத்தில் பள்ளத்தாக்கு பகுதியொன்றில் ஏற்கெனவே வெட்டப்பட்டிருந்த இரண்டு மரங்கள் ஒன்றோடு ஒன்றாக கீழே கிடந்தள்ளன. அதிலொரு மரத்தின் மேலே நின்று அதனை குற்றிகளாக வெட்டிக்கொண்டிருந்தபோது அதிலொரு மரக்குற்றி, வழுக்கி கொண்டு வந்து குறித்த நபரின் நெஞ்சு பகுதியில் மோதியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago