2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மரத்தால் தனியார் பஸ் தரிப்பிட கூரைக்கு ஆபத்து

R.Maheshwary   / 2023 ஜனவரி 18 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத்.எச்.எம்.ஹேவா

ஹட்டன் பிரதான பஸ் தரிப்பிடத்தின் தனியார் பஸ்கள் நிறுத்தி வைக்கப்படும் இடத்துக்கு அருகிலுள்ள கட்டடத்தின் கூரை மீது மரம் முளைத்துள்ளதால் கூரை உடைந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சிறிய கன்றாக இருந்த போதே, இந்த மரத்தை கூரையிலிருந்து அப்புறப்படுத்தியிருக்கலாம் என தெரிவித்துள்ள தனியார் பஸ் நடத்துனர்கள் தற்போது மரம் பெரிதாக வளரத் தொடங்கியுள்ளதாகவும் இதனால் இது கட்டடத்துக்கே ஆபத்தாக மாறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பல தடவைகள் ஹட்டன்-டிக்கோயா நகரசபையினருக்கு அறிவித்தும் இதுவரை அந்த மரத்தை வெட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .