R.Maheshwary / 2022 ஜூன் 12 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி பெருமாள்,
மஸ்கெலியா - பிரவுன்லோ வனப்பகுதிக்கு தனது சகோதரனுடன் இன்று (12) காலை வேளையில் விறகு சேகரிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன், மரத்திலிருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
மரத்திலிருந்து தவறி விழுந்த குறித்த சிறுவன், ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவத்தில், மஸ்கெலியா சமனெலிய சிங்கள மகா வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி பயிலும், மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த 14 வயதுடைய எஸ்.ஜே.ரஜிந்த துல்சான் குணசேகர என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் சடலம் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

22 minute ago
44 minute ago
47 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
44 minute ago
47 minute ago
59 minute ago