2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மரத்தில் ​தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு

R.Maheshwary   / 2022 ஜனவரி 18 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

பசறை - ஆக்கரதன்ன  பகுதியிலிருந்து 23 வயது இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

  கடந்த  6ஆம் திகதி  காணாமல்  போன  இளைஞரே,  நேற்று (17)   மாலை  சடலமாக  மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர், இந்த மாதம் 6ஆம்   திகதி  வீட்டில்  இருந்து  வெளியில்  சென்று  வீடு  திரும்பவில்லை  என,  பசறை  பொலிஸ்  நிலையத்தில்  மரணித்தவரின்  தாத்தாவால்  14ஆம்  திகதி  முறைபாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அவரது  வீட்டிலிருந்து   சுமார்  1கிலோமீற்றர்  தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது.

 இதனையடுத்து, இளைஞரின் தாத்தா காட்டுப்பகுதியில்  தேடிச் சென்ற போது, இளைஞரின் சடலம் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பசறை பொலிஸார் விசாரணைகளை முன்​னெடுத்து வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X