2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மரமேறியவரை கீழிறக்க பல மணித்தியாலங்கள் போராட்டம்

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 27 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

200 அடி உயரமான மரத்தில் ஏறி, கிளைகளை வெட்ட முயற்சித்த தொழிலாளி ஒருவர், திடீர் நோய்வாய்பட்டதால், அவரை மரத்திலிருந்து கீழே கொண்டு வர 3 மணித்தியாலங்கள் ​போராடிய சம்பவம் ஒன்று, லிந்துலை பகுதியில் பதிவாகியுள்ளது.

​லிந்துலை- லெமேரியா தோட்டத்தைச் சேர்ந்த 25 வயதான பாலச்சந்திரன் அதிஸ்டகுமார் என்ற இளைஞர், நேற்று (26) காலை மரத்தின் கிளைகளை வெட்டுவதற்காக 200 அடி உயரமான யூக்கலிப்டஸ் மரத்தில் ஏறியுள்ளார்.

இந்த நிலையில், நேற்று காலை குறித்த பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக, மரத்திலேயே அந்த  ​இளைஞர் திடீர் நோய்வாய்ப்பட்டுள்ளார்.

இதனையடுத்து லெமேரியா தோட்ட இளைஞர்கள் லிந்துலை பொலிஸாரின் ஒத்துழைப்புடன், கடும் பிரயத்தனங்கள் செய்து 3 மணித்தியாலங்களின் பின்னர், மரத்திலிருந்து அந்த இளைஞரை கீ​ழே இறக்கி, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X