R.Maheshwary / 2021 மே 27 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய இராணிவத்தை தோட்டத்தில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில், வீடொன்று சேதமடைந்துள்ளதுடன் இருவர் காயமடைந்து லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இச்சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இப்பிரதேசத்தில் வீசிய கடும் காற்று காரணமாக, குறித்த வீட்டுக்கு பின்புறத்தில் இருந்த மிகவும் பழமை வாய்ந்த பாரிய மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது சமையலறையில் இருந்த 38 வயதுடைய தாயும், 6 வயதுடைய மகளும் காயமடைந்ததாகவும் அதனை தொடர்ந்து அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago