Freelancer / 2023 ஜனவரி 12 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன் நகரில், மரவள்ளிக் கிழங்கு, வத்தாலி கிழங்கு மற்றும் பலாக்காய் பொதி ஆகியவற்றின் விலைகள் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளன என சுட்டிக்காட்டிய நுகர்வோர், இந்த விலை அதிகரிப்பினால் தாங்கள் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக தெரிவித்தனர்.
ஹட்டன் நகரில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோ கிராம் மரவள்ளிக் கிழங்கு 200 ரூபாய்கும், வத்தாலி கிழங்கு ஒரு கிலோகிராம் 160 ரூபாய்க்கும், சுத்தம் செய்யப்பட்ட பலாக்காய் பொது ஒரு கிலோ கிராம் 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளமையால், மரவள்ளிக்கிழங்கு, வத்தாலி கிழங்கு மற்றும் பலாக்காய் ஆகியவற்றுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. எனினும், அவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன.
மேலே, குறிப்பிடப்பட்டுள்ள இந்த மூன்று பொருட்களின் விலைகளும் இந்தளவுக்கு அதிகரித்துள்ளமை ஹட்டனில் இதுவே முதல்தடவையாகும் என்றும் நுகர்வோர்
தெரிவித்துள்ளனர். R
1 hours ago
7 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
16 Jan 2026