2025 மே 17, சனிக்கிழமை

மருந்தகத்தில் போதை மாத்திரைகளை விற்றவர் கைது

R.Maheshwary   / 2022 நவம்பர் 27 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, மாத்தளை- பல்லேபொல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த போதைப் பொருள் வர்த்தக நிலையம் ஒன்று  சுற்றிவளைக்கப்பட்டதென மாத்தளை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய மருந்தகம் ஒன்றே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டதுடன், இதன்போது 17 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 520 மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் சில காலமாக இந்த போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ஒரு மாத்திரையின் விலை நூறு ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக சந்தேக நபர் மஹவெல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .