R.Maheshwary / 2022 ஜூன் 19 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
தேயிலைத் தோட்டமொன்றில் சுற்றித் திரிந்த மரையொன்றை கொன்று, இறைச்சியாக்கிய இருவர் பொகவந்தலாவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிட்வெல் தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அந்தத் தோட்டத்தின் தேயிலை மலைகளில் சுற்றித் திரிந்த மரையையே பொறி வைத்து பிடித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேகநபர் ஒருவரின் வீட்டை சோதனையிட்ட போது, அங்கிருந்து 12 கிலாகிராம் மரை இறைச்சி கைப்பற்றப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
21 minute ago
43 minute ago
46 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
43 minute ago
46 minute ago
58 minute ago