Editorial / 2022 ஜனவரி 20 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
மஸ்கெலியா- கங்கேவத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில், அவரது கணவர் நேற்று (19) மஸ்கெலியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 24 வயதுடைய வசந்தமலர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (19) காலை தனது மனைவியை நித்தரையிலிருந்து எழுப்பும் போது, அவர் உயிரிழந்திருந்ததாக அப்பெண்ணின் கணவரால், மஸ்கெலியா பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த தம்பதியினர் இருவருக்கும் தொடர்ச்சியாக பிரச்சினைகள் காணப்பட்டதுடன், இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் அப்பெண், அவரது கணவரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் அயல்வாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், நேற்று முன்தினம் (18) இரவும் தம்பதிகள் இருவருக்குமிடையில் பிரச்சினை ஏற்பட்டதாக அயல்வீட்டார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .