2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

‘மலசலக்கூடம் விரைவில் கையளிக்கப்படும்’

Gavitha   / 2021 பெப்ரவரி 24 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

அக்கரப்பத்தனை பிரதேச சபையின் ஊடாக, பசுமலை நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பொதுமலசலக்கூடத்தை, மிக விரைவில் மக்கள் பாவனைக்குத் திறந்துவிடவுள்ளதாக, பிரதேச சபைத் தவிசாளர் சுப்ரமணியம் கதிர்செல்வன் நேற்று (24) உறுதியளித்தார்.

மலசலக்கூடத்தில் நீர் விநியோகிக்கும் பணி இன்னும் பூர்த்தியடையவில்லை என்பதாலேயே, மக்கள் பாவனைக்காக இன்னும் இது திறந்து வைக்கப்படாமல் இருந்தது என்றும் இது பூர்த்தி செய்யப்பட்டு விரைவில் திறந்து வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேநேரத்தில் பசுமலை நகரத்துக்கு வருகை தரும் பொதுமக்கள் பாவிக்கக் கூடிய வகையில் மலசலக்கூடத்தின் அனைத்து அபிவிருத்தி பணிகளும் ஓரிரு நாள்களில் பூர்த்தி செய்ய, உடனடி நடவடிக்கை, நேற்று (24) மேற்கொள்ளப்பட்டது.

குறைபாடுகளுடன் பொதுமக்களுக்குக் கையளித்து, மக்கள் குறைகூறுவதை விட, பூர்த்தியடைந்த பின்னர், மக்களுக்குக் கையளிப்பதே சிறந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .