Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
ஆர்.மகேஸ்வரி / 2018 மே 30 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலிருந்து பதுளை வரையான ரயில் சேவையை, மிகவும் பாதுகாப்பான முறையில் நிர்மாணிப்பது தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
எதிர்வரும் 6 மாதங்களுக்குள், இந்த வேலைத்திட்டத்தை நிறைவு செய்யவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.
கடந்த 28ஆம் திகதியன்று நடைபெற்ற, பதுளை மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, இராஜாங்க அமைச்சர், மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரம்புக்கனையிலிருந்து பதுளை வரையான ரயில் நிலையங்களில் பல, பாதுகாப்பற்ற இடங்களிலேயே காணப்படுவதாகவும் குறித்த இடங்களில், மண்சரிவு மற்றும் ஏனைய அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும், ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதாக, கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பிரச்சினைகளுக்கு, எவ்விதத் தீர்வுகளும் முன்வைக்கப்படாமல் தாமதப்படுத்தப்படும் ஒவ்வொரு நிமிடமும், ஆபத்துக்கே வழிசமைக்குமென, ரங்கே பண்டார குறிப்பிட்டார்.
இந்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் குறித்த நிறுவனங்களின் முழுமையான மேற்பார்வையின் கீழ், மலைநாட்டு ரயில் சேவையை, சரியான முறையிலும் விஞ்ஞான பூர்வமாகவும் அமைப்பதற்கான திட்டங்கள், தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும், அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பான காரணங்களைத் தெளிவுப்படுத்திய அமைச்சர், எதிர்வரும் 6 மாதங்களுக்குள், அந்த வேலைத்திட்டத்தை நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
48 minute ago
1 hours ago