2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மலையகத்தில் தேங்காய்க்கு கிராக்கி

Editorial   / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கு.புஸ்பராஜ்

மலையகத்தில் உள்ள நகரங்களில்  அதிகப்படியான விலையில் தேங்காய் விற்பனை செய்யப்படுவதாக, நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக மலையகத்துக்கு வெளிமாவட்டங்களில் இருந்தே தேங்காய்கள் கொண்டுவரப்படுகின்றன. சில நாட்களாக நகரத்தில் தேங்காய்களுக்கு மிகவும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரனமாக, ஒரு தேங்காய் 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தோட்டப்பகுதியில் நடாத்தப்படுகின்ற சிறு பெட்டிக்கடைகளில் 90 ரூபாய் தொடக்கம் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரியவருகின்றது.

இவ்வாறான நிலைமை, அக்கரப்பத்தனை, மன்றாசி, டயகம, ஹோல்புறூக், நாகசேனை, மெராயா ஆகிய பிரதேசங்களிலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெருந்தோட்ட மக்கள், கோதுமை மாவினால் அதிகப்படியாக உணவு வகைகளை தயாரிக்கப்படுவதால், இதற்கு அதிகமாக தேங்காய் பயன்படுத்தப்படுவதால் இவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தேங்காயின் விலை அதிகரிப்பு தொடர்பாக வர்த்தகர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“வெளிமாவட்டங்களில் இருந்தே தேங்காய்கள் கொண்டுவரப்படுகின்றன. சில நாட்களாக, தேங்காய்களை கொண்டு வருபவர்கள் வருவதில்லை. தற்போது தேங்காய்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே, இவ்வாறான விலையில் தேங்காய்கள் விற்பனை செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் இந்நிலையில் மாற்றம் ஏற்படும்” எனத் தெரிவித்தனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .