2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

மலையக இளைஞனின் நடைபயணம் ஆரம்பம்

R.Maheshwary   / 2022 மே 01 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,  சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் பதக்கம் வென்ற நடை வீரரான மணிவேல் சத்தியசீலன் என்ற இளைஞர், நேற்று (30) காலை தனது எதிர்ப்பு நடை பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

உடபுஸ்சலாவை கோடன் தோட்டத்திலிருந்து  இராகலை, நுவரெலியா,  தலவாக்கலை, ஹட்டன், கினிகத்தேனை,  அவிசாவளை வழியாக கொழும்புக்கு 20 மணிநேரத்தில் செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உடப்புஸ்சலாவை பகுதியில் இருந்து இராகலைக்கு தனது மனைவியுடன் வருகைத் தந்த இவர், இராகலை முருகன் ஆலயம், பள்ளிவாசல், விகாரை மற்றும் சந்திரமாதா தேவாலயம் ஆகியவற்றில் வழிபாடுகளில் ஈடுபட்ட  பின்னர், நடை பயணத்தை மேற்கொண்டார்.

இவரது நடைபயணத்தை இராகலை பிரதேச மக்கள் உற்சாகமாக ஆரம்பித்து வைத்தனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X