2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் மகளிர் தின நிகழ்வுகள்

R.Maheshwary   / 2022 மார்ச் 13 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு நேற்று(12) ஹட்டனில் நடைபெற்றது.

  “மலையக பெண்களின் வீடு மற்றும் வாழ்வாதாரத்திற்கான காணி உரிமையை உறுதி செய்வோம்” என்ற தொனிப்பொருளில் இந்த மகளிர் தின நிகழ்வு நடைபெற்றது.

“ஆயிரம் ரூபாய் சம்பளம் என்ற போர்வையில் நாங்கள் ஏமாற்றபட்டோம்”, “புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அரசு பொறுப்பு கூறலை உறுதிப்படுத்து”, “பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நிவாரணத்தை பெற்று கொடு”, “மலையக பெண்களின் வாழ்வாதாராத்தினை பெற்று கொடு”, என்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம், சிவப்பு கொடிகளையும் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர்.

ஹட்டன் மல்லியப்பு சந்தியிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி, ஹட்டன் கிருஷ்ண பகவான் மண்டபத்தை சென்றடைந்ததும் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

இதற்கான ஏற்பாடுகளை மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் மகளிர் அணியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்வில் மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் பிரதான ஏற்பாட்டாளர் எஸ்.டி.கணேசலிங்கம், மகளிர் பிரிவிற்கான பொறுப்பளார் பி.புஷ்பலதா, பி. ரொஷானி, மொன்ரால் அமைப்பின் செயற்பட்டாளர் விமுக்தி த சில்வா, மலையக மகளிர் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது பெண்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X