2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மலையக ரயில் சேவைகளில் பாதிப்பு

Editorial   / 2022 ஒக்டோபர் 28 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளையில் இருந்து ​கொழும்பு கோட்டையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கடுகதி ரயில் இன்று (28) தடம்புரண்டதில் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பதுளையில் இருந்து இன்று (28) காலை 10.15 க்கு கொழும்பு கோட்டையை நோக்கி புறப்பட்ட கடுகதி ரயிலின் முதலாவது வகுப்புக்கான பெட்டியொன்று, ஹட்டன் ரயில் நிலையத்துக்கும் ரொசெல்ல ரயில் நிலையத்துக்கும் இடையில் தடம்புரண்டது.

இதனால், நாவலப்பிட்டிக்கும் ஹட்டனுக்கும் இடையிலான சேவையும், பாதிக்கப்பட்டுள்ளது. மலையகத்துக்கான ரயில் சேவையை முன்னெடுப்பதிலும் சிரமங்களுக்கு உள்ளாவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X