R.Maheshwary / 2022 ஜனவரி 10 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
தலவாக்கலை, லிந்துலை, டயகம, அக்கரப்பத்தனை, பசுமலை, மெராயா நாகசேனை, நானுஓயா போன்ற பிரதேசங்களில் இன்று மாலை முதல் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாகசேனை- டயகம பிரதான வீதி செப்பனிடும் பணி நடைபெற்று வருவதால், இதன் காரணமாக பாதை வழுக்கும் தன்மை காணப்படுகிறது. இதனால் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு லிந்துலை போக்குவரத்து பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்தோடு டயகம நகரத்திலிருந்து போடஸ் வழியாக ஹட்டன் செல்லும். பாதையில் என் சி தோட்டப் பகுதியில் பாதை அகலப்படுத்தும் பணி முன்னெடுக்கப்படுவதால் அப்பகுதியும் வழுக்கும் தன்மை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டமும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .