R.Maheshwary / 2021 நவம்பர் 05 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
மலையகத்தில் தொடர்ந்து பிற்பகல் வேளைகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக, வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய, நுவரெலியா – மீபிலிமான, மாகொட, எல்க்பிளைன்ஸ் மற்றும் பிளாக்பூல் பகுதிகளில் கடும் மழை காரணமாக பெருமளவான மரக்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு இந்த விவசாய காணிகள் மூழ்குவதற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
அத்தோடு, தோட்டங்களை அண்டிய வீடுகளுக்கும் வெள்ள நீர் புகுந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து இன்றி தத்தளித்து வரும் நாங்கள் இவ்வாறு விவசாய நிலங்களும் மழை வெள்ளத்தால் அழிந்தால், எதிர்காலத்தில் காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
6 minute ago
20 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
20 minute ago
36 minute ago