2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மழையையும் பொருட்படுத்தாது குவிந்த யாத்திரிகர்கள்

R.Maheshwary   / 2022 மார்ச் 20 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

நீண்ட வார இறுதி விடுமுறையையடுத்து,ஹட்டன் ஊடாக சிவனொளிபாதமலையை தரிசிப்பதற்கு அதிகமான யாத்திரிகள் வருகைத் தந்தனர்.

குறித்த யாத்திரிகர்கள் வருகைத் தந்த வாகனங்கள் அனைத்தும் நல்லதண்ணி நகரில் அமைக்கப்பட்டுள்ள மஸ்கெலியா பிரதேசசபையின் வாகனத் தரிப்பிடம் மற்றும் தனியார் வாகன தரிப்பிடங்களில் நிறுத்தப்பட்டன.

இதற்கு மேலதிகமாக நல்லதண்ணி- மஸ்கெலியா பிரதான வீதியின் இருமருங்கிலும் 4 கிலோமீற்றர் தூரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

நேற்று  (19) ஹட்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிக மழை பெய்த நிலையில் கூட அதிகளவாக யாத்திரிகர்கள் சிவனொளிபாதமலைக்குச் சென்று வந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X