R.Maheshwary / 2022 ஜூன் 09 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி மஸ்கெலியா எரிபொருள் நிலையத்துக்கு முன்பாக மஸ்கெலியா பிரதேச மக்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடந்த மூன்று கிழமையாக மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் இன்று (9) மண்ணெண்ணெய் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்ப்புடன் வருகைதந்த நிலையில், “இன்றைய தினமும் மண்ணெண்ணெய் வரவில்லை” என எரிபொருள் நிலைய ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஆவேசமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மண்ணெண்ணெய் விநியோகம் செய்வதற்கு முறையான முறைமை ஏற்படுத்தக் கோரி, வரிசையில் நின்ற சுமார் 500ற்கும் மேற்பட்ட நுகர்வோர் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் மஸ்கெலியா – ஹட்டன், மஸ்கெலியா – நல்லதண்ணி போன்ற பிரதான வீதியினூடான போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிதமாகியிருந்தது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியிருந்தனர்.
இதனையடுத்து, நாளை அல்லது எதிர்வரும் நாட்களில் அணைவருக்கும் மண்ணெண்ணெய் கிடைக்க தாங்கள் ஏற்பாடுகளை செய்து தருவதாக எரிபொருள் நிலைய அதிகாரியால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டமை குறிப்பிடதக்கது.

2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago