2025 மே 17, சனிக்கிழமை

மஹாஎலிய வனம் அழிவின் விளிம்பில்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் பொகவந்தலாவை- மஹாஎலிய வனம், சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வாளர்களால் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருகின்றது.

இதனால் காசல்றீ நீர்த்தேக்கத்துக்கு நீரை ஏந்திச்செல்லும் கெசல்கமுவ ஓயாவும் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருகின்றது.

சில அரசியல்வாதிகளின் தலையீட்டுடன் சில அதிகாரிகளின் ஒத்தழைப்புடன் இந்த சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு முன்னெடுக்கப்படுவதாகவும் நோர்வூட், பலாங்கொட, பொகவந்தலாவை, ஹட்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பிரபல மாணிக்கக்கல் வியாபாரிகளால் 300 தொடக்கம் 400 பேர் வரையான தொழிலாளர்களை ஈடுபடுத்தி, இந்த மாணிக்கக்கல் அகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த வனப்பகுதிக்குள் ​பலாங்கொடை மேல் கலகம, கரிவத்த வீதி, ஹோட்டன்தென்ன நன்பேரியல், பொகவந்தலாவை- லொயினொன் தோட்டம் ஊடாக பல வழிகளில் வனப்பகுதிக்குள் பலர் நுழைந்து வனத்தை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வனப்பகுதிக்குள் நுழையும் அனைத்து பகுதிகளும் முழுமையாக உள்ளடக்கும் வகையில் இரவு நேரங்களில் காவல்காரர்கள் ஈடுபடுத்தப்பட்டு இந்த சட்டவிரோத செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுற்றிவளைப்புக்காக வனத்துக்குள் செல்லும் பாதுகாப்பு தரப்பினர் வெறுங்கையுடன் திரும்பும் சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு கைதுசெய்யப்படும் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட பின்னர், பிணையில் வௌயில் வரும் அவர்கள் மீண்டும் இந்த சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொகவந்தலாவை பிரதேசத்திலுள்ள பல தோட்டங்களின் தொழிலாளர்கள் இவ்வாறு சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடுத்தப்படுகின்றமையால், பெருந்தோட்ட தொழில்களில் ஈடுபட தொழிலாளர்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் பெருந்தோட்ட நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .