R.Maheshwary / 2022 ஒக்டோபர் 24 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவின் குஹாகொட- வராதென்ன மகாவலி கங்கையில் விழுந்த காணாமல் போன மாணவனின் சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மாதம் 19ஆம் திகதி கண்டி பகுதியில் உள்ள பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவர் குழுவொன்று விருந்துபசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, இரண்டு மாணவர்கள் ஆற்றில் தவறி விழுந்துள்ளனர்.
இவ்வாறு விழுந்த மாணவர்களுள் ஒருவர், ஆற்றிலிருந்த கற்பாறையைப் பற்றி பல மணிநேர போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டதுடன் மற்றைய மாணவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் தந்துரே பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடையவர் என கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற வானிலையால் மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் மாணவனின் சடலத்தை தேடுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
3 hours ago
8 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
8 hours ago
17 Jan 2026