2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மாணவர்களுக்கு போதை மருந்தை விநியோகித்தவர் கைது

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 12 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, போதைப்பொருள் விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர்,  போதைப்பொருளுடன் கினிகத்தேனை பொலிஸாரால் நேற்று  (11) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வைத்தியரின் அனுமதியுடன் மருந்தகங்களில் விநியோகிக்கப்படும் ஒரு வகை மருந்து, கினிகத்தேனை பிரதேச  பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக கினிகத்தேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கைது செய்த போது, ​​அவரிடம் 105 போதைப்பொருள் இருந்ததாகவும், சந்தேக நபரால் அவை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டியைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தேகநபர், நீண்ட காலமாக இந்த போதை வர்த்தகத்தை  மேற்கொண்டு வந்துள்ளதாகவும், சந்தேகநபர் ஹட்டனில் உள்ள மருந்தகம் ஒன்றில் இருந்து மொத்தமாக இந்த மருந்தை கொள்வனவு செய்து, மாணவர்களுக்கு விநியோகித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X