மொஹொமட் ஆஸிக் / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி, பூஜாப்பிட்டிய பிரதேசத்திலுள்ள புராதன விகாரையிலிருந்து, நீர் இறைக்கும் இயந்திரத்தைத் திருடிச் சென்ற குற்றச்சாட்டில், மாணவர்கள் மூவரை, பூஜாபிட்டிய பொலிஸார், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கைதுசெய்துள்ளனர்.
அதிகாலை வேளையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், நீர் இறைக்கும் இயந்திரத்துடன் சென்றுகொண்டிருந்த மாணவர்களைக் கண்டு விசாரணைக்கு உட்படுத்தியபோதே, மாணவர்கள் அந்த இயந்திரத்தை விகாரையிலிருந்து திருடிய விவகாரம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மாணவர்களைக் கைதுசெய்த பொலிஸார், இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி மூவரையும் நீதிமன்றில் ஆஜர்செய்யவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
22 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
46 minute ago