Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
R.Maheshwary / 2022 நவம்பர் 14 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வால் பொகவந்தலாவை- மஹாஎலிய வனத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பு பாரிய அழிவை எதிர்நோக்கியுள்ளதாக ஹோட்டன் சமவெளி தேசிய வனத்துக்கு பொறுப்பாளர் பி.பீ.தயாரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் ஹட்டன், பொகவந்தலாவை, நோர்வூட், பலாங்கொடை, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர்களால் சட்டவிரோத அகழ்வு முன்னெடுக்கப்படுவதாகவும் இதற்காக தினமும் 200 பேர் வரை அகழ்வு தொழிலில் ஈடுபடுவதாகவும் இதனால் காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு பிரதானமாக நீரை கொண்டு செல்லும் கெசல்கமுவ ஆறும் பாரிய அழிவை சந்தித்துள்ளதாக பி.பீ.தயாரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்த வனப்பகுதியில் தற்காலிக கூடாரங்களை அமைத்து வனத்தில் தங்கியிருந்து அகழ்வில் ஈடுபடுவதுடன் பாரிய மரங்களை அழிப்பதாகவும் தெரிவித்தார்.
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடுபவர்களை கைதுசெய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு 12ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போது, மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, பொகவந்தலாவை மஹாஎலிய பிரதேத்தில் சுற்றாடல், நீர் மாசுவை ஏற்படுத்தி சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் காசல்ரீ நீர்த்தேக்கம் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை கடந்த 12ஆம் திகதி மஹாஎலிய பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, தமது அதிகாரிகள் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வாளர்களால் தாக்குதலுக்கு இலக்காகியதாகவும் எனினும் தமது அதிகாரிகள் அவர்களின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் சந்தேகநபர்களை கைதுசெய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
17 May 2025
17 May 2025