2025 மே 05, திங்கட்கிழமை

மாதம்மை மீன் விற்பனைக் கட்டடம் திறக்கப்படும்

Gavitha   / 2020 நவம்பர் 15 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி மாவட்ட, மாதம்மையில் அமைந்துள்ள மீன் விற்பனை நிலையக் கட்டடத்தைத் திறப்பதற்கு, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ நடவடிக்கை எடுத்துள்ளார்.

பல தரப்பினரிடம் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்த, இப்பகுதியைச் சேர்ந்த மீன் விற்பனையாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமையை அடுத்து, மீன் விற்பனை நிலைய நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் இந்த மீன் விற்பனை நிலையக் கட்டடத் திறந்து வைப்பதன் மூலம், தற்போது வீதியோரங்களில் முன்னெடுக்கப்படும் மீன் விற்பனைகளைத் தவிர்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X