2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மாத்தளையில் குடிநீருக்கு தட்டுபாடு ஏற்படலாம்

R.Maheshwary   / 2023 ஜனவரி 05 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ம​ஹேஸ் கீர்த்திரத்ன

மாத்தளை மாவட்டத்திலுள்ள நீர் ​ஆதாரங்களை அண்மித்த பகுதிகளில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத செயற்பாடுகளால்   மாத்தளை மாவட்டத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என  கெபெக் ஸ்ரீ லங்கா அமைப்பின் பணிப்பாளரும் சுற்றாடல் ஆர்வலருமான காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்டத்தில் மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் பாதுகாப்பான, பாதுகாப்பற்ற கிணறுகள், கிராமிய நீர்த்திட்டங்கள், குழாய் கிணறு, குளம், வாவி போன்ற இடங்களிலும் பாரிய குடிநீர்ப் பிரச்சினை ஏற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மாத்தளை மாவட்டத்தின் நக்கிள்ஸ் மலைத்தொடரை  சுற்றியுள்ள தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான காணிகளில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் அதனால் நீர் ஆதாரங்கள் அழியும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .