2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

மாத்தளையில் நாளை வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 05 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாத்தளை மாவட்டத்தில் நாளை (6) காலை 6 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிவரை அத்தியாவசிய பொருள்கைளை விநியோகிக்கும் வர்த்தக நிலையங்களை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இறைச்சி விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள், சிற்றலறை கடைகள் உள்ளிட்டவைகளை திறக்க மாத்தளை மாவட்ட கொரோனா ஒழிப்பு குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்காக குடும்பத்திலிருந்து ஒருவர் மாத்திரம் செல்ல முடியும் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X