Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதுளை – மாப்பாகலை பெருந்தோட்டத்தை, அனைத்து துறைகளிலும் மேம்பாட்டைய வைத்து, ஏனைய பெருந்தோட்டங்களுக்கு முன்மாதிரியாக, மாற்றியமைப்பதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்வது தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
மாப்பாகலை பெருந்தோட்ட பிரைட் ஸ்டார் முன்பள்ளி கேட்போர் கூடத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற ஒன்றுகூடலின் போதே, மேற்படி முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்டன.
பொலிஸ் பிரஜைகள் குழு பிரதி செயலாளர் ஆர்.சலோபராஜ் தலைமையில் நடைபெற்ற மேற்படி ஒன்றுகூடலில், பொலிஸ் பிரஜைகள், குழு உறுப்பினர்கள், தோட்ட மட்டத் தலைவர்கள், ஆலய பரிபாலன சபையினர், வர்த்தகத்துறையில் ஈடுபட்டிருப்பவர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், இளைஞர், யுவதிகள், நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இவ் ஒன்று கூடலில், பின்வரும் முடிவுகள் ஏகமானதாக எடுக்கப்பட்டதுடன், அதனை செயல்படுத்தவும் குழுக்கள் நியமிக்கப்பட்டன.
“தோட்ட மக்களிடையே, சமூக ரீதியில் ஒற்றுமை மற்றும் ஐக்கியத்தை வலுப்படுத்தல் வேண்டும்.
கிராம அபிவிருத்திச் சபையின் செயற்பாடுகள் சம்பந்தமாகவும், அபிவிருத்தியின் போது மாப்பாகல தோட்டப் பிரஜைகளின் தேவைக்காக, பெறப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்துதல்.
மாப்பாகல தோட்டத்தின் குடியிருப்பாளர்களுக்கு ஏற்கனவே அவர்களது இருப்பை உறுதி செய்ய ஒவ்வொரு பிரஜைக்கும் விலாசம் அடங்கிய ஸ்டிக்கர்களை தத்தமது வீடுகளில் ஒட்டி பாதுகாப்பதோடு, எமது தோட்டப்பாதை 04 வீதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதை பெற்றுக்கொள்ளப்பட்ட விளம்பர பலகையை முறையாக வீதிகளுக்கு ஊன்றி பாதுகாக்க, ஒவ்வொரு வீதிக்கு இருவர் வீதம் நியமித்து பராமரிக்க வேண்டும்.
தோட்டத்தை சுத்தமாக வைத்திருப்பதற்காக சுகாதாரம் சம்பந்தமான விளக்கங்களை எடுத்துரைத்ததோடு குப்பைகளை முறையாக ஒழுங்குபடுத்தாததால் இப்பிரச்சினைக்கு எவ்வகையில் தீர்வைக் காணலாம் என்பதையிட்டு விரிவாக ஆராயப்பட்டு, அதனை முழுமையாக அப்புறப்படுத்த சகலரும் ஒத்துழைப்பு வழங்க ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், கோவில் பரிபாலன சபையை கட்டுக் கோப்புடன் நடத்திச் செல்லவும் நிரந்தரமாக வசிக்கும் இளைஞர் யுவதி மற்றும் பொதுவானவர்களை கமிட்டியில் உள்ளீர்த்து சமய விழுமியங்களை முறையாக பேணுவது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டது.
அறநெறி பாடசாலை ஆரம்பிக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago