Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்
“மலையக மக்களின் உயிர் வாழும் உரிமைக்கான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம்” என்ற தொனிப்பொருளில் மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம், ஹட்டன் நகரில் துண்டு பிரசுரம் மற்றும் தபாலட்டைகளில் கையெழுத்து பெறும் நடவடிக்கையினை நேற்று(10) காலை முன்னெடுத்திருந்தது.
ஹட்டன் நகரில் பிரதான பஸ் தரிப்பு நிலையத்துக்கு அருகில் துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கை இடம்பெற்றது.
தோட்ட தொழிலாளர்களின் காணி உரிமை மற்றும் இதர உரிமைகள், தொடர்பில் மக்களின் கருத்துகளை பதிவு செய்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவர குறித்த இயக்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
காணி உரிமையை உறுதி செய்தல், பெருந்தோட்டத்துறையிலுள்ள அரச சொத்துகளை விற்பனை செய்வதை உடனே நிறுத்து, கொள்ளையடிக்கப்பட்ட ஊழியர் சேமலாப நிதியம் மற்றம் ஊழியர் நம்பிக்கை நிதிய சேவைக்கால கொடுப்பனவுகளை உடனே பெற்றுக் கொடு, தேயிலைப் பயிர்ச் செய்கைக்காக ‘கிளைபொசெட்’ தடையை அகற்ற வேண்டாம், தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை 1,000 ரூபாவாக உயர்த்து போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில், 100ற்கும் மேற்பட்டோர் தமது உரிமை தொடர்பில் சுருக்கமாக தபாலட்டைகளில் எழுதி குறித்த அமைப்பிடம் கையளித்தனர்.
இவ்வாறாக, பெறப்பட்ட தபாலட்டைகளை உரிய காலப்பகுதியில் அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அங்கு உறுதியளிக்கப்பட்டது.
மேலும், மக்களுக்கு தெளிவூட்டும் துண்டு பிரசுர விநியோக நடவடிக்கை ஹட்டன் பஸ் தரிப்பு மத்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு, முழு நகரத்திலும் உள்ள கடைகள் மற்றும் பாதசாரிகளுக்கு விநியோகிகப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Jul 2025