Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 மார்ச் 02 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். கே.குமார்
200 வருடங்களுக்கு முன் தொழில் நிமிர்தமாக இந்தியாவிலிருந்து வருகை தந்த மலையக இந்திய வம்சாவளி பெருந்தோட்ட தொழிலாளர்கள் எந்தவித மாற்றமும் இல்லாமலே வாழ்ந்து வருகின்றார்கள் என மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஆர். இராஜாராம் தெரிவித்துள்ளார்.
இவர்களின் வாழ்வாதாரத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவருவதற்கு மலையக தொழிற்சங்க அரசியல் தலைமைகள், கல்விமான்கள், சமூக ஆய்வாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களது பிரிவின வாதத்தை விடுத்து ஒருமித்து இம் மக்களின் வாழ்வாதார நிலைப்பாட்டை மாற்றுவதத்திற்கு ஒன்றிணைவோம்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களை விட மலையக இந்திய வம்சாவளி பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது.
தொழிலார்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை. தோட்ட கம்பனிகள் இலாபத்தை தேடுவதிலே அதிக அக்கறை செலுத்துகின்றன. தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டுவதில்லை என்றார்.
அதேபோல, தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்ற போதிலும் அங்கு வைத்திய சேவைகளை முறையாக செயல்படுத்த போதிய உபகரணங்கள், மருந்துகள், அம்பியுலன்ஸ் மற்றும் வைத்தியர் வசதிகள் இல்லை என்றார்.
தோட்ட தொழிலாளர்களின் தொழில் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பாக செய்து கொள்ளப்பட்டுவந்த கூட்டு ஒப்பந்தமும் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றது.
எனவே, 200 வருடங்கள் கடந்தும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார நிலைப்பாட்டில் மாற்றமில்லை. இவர்களின் வாழ்வாதார நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை கொண்டுவருவதற்கு மலையக சமூகம் ஒன்றிணைய வேண்டுமென இராஜாராம் கோரிநின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago