Janu / 2024 ஜூலை 17 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை. வியதிகுண கிராமத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
வியதிகுண, வினீதகம பிரதேசத்தை சேர்ந்த மனமேந்திர படபெண்திகே பியதாச என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வன விலங்குகளிடம் இருந்து தமது பயிர்களை பாதுகாப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த அனுமதியற்ற மின்கம்பியை சீர் செய்யச் சென்ற போதே இவ்வாறு மின்சாரம் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் .
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
பாலித்த ஆரியவன்ச
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago