2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மின்னல் தாக்கி 10 வயது சிறுமி பலி

எம். செல்வராஜா   / 2020 ஏப்ரல் 19 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேனைப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள, தனது தாய், சகோதரனுடன் சென்ற 10 வயது சிறுமி, மின்னல் தாக்கி, நேற்று (18) மாலை பலியாகியுள்ளார்.

கொஸ்லந்தை பகுதியின் ஓக்வில் தோட்டத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் ருக்சி என்ற பத்து வயது சிறுமியே மின்னல் தாக்கி பலியாகியுள்ளார். 

ஓக்வில் தோட்டத்தைச் சேர்ந்த மேற்படி சிறுமியும் அவரது தாய், சகோதரனும் சேனைப் பயிர்ச்செய்கையை பாதுகாக்கவும், காட்டு யானைகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் மரமொன்றின் மேல் குடில் அமைத்து இரவு நேரங்களில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், மரத்தில் இருந்து கீழ் இறங்கிய சிறுமி மின்னல் தாக்கத்துக்கு உள்ளான பின்னர், சிறுமி வெள்ளவாய் அரசினர் வைத்தியசாலைக்குச் செல்லப்பட்ட போது, அவர் உயிரிழந்து விட்டதாக, வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X