Freelancer / 2022 மார்ச் 19 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.பிரபா
நாட்டில் அனைத்து மக்களும் மிக சந்தோசமாக வாழ்வதால் அனைவரும் இந்த அரசுக்கே மீண்டும் தமது வாக்குகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஹட்டன் எரிப்பொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய்காக வரிசையில் காத்திருந்த மக்கள் தெரிவித்தனர்.
ஹட்டனில் அமைந்துள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன எரிப்பொருள் நிரப்பு நிலையத்திற்கு கடந்த 10 திகதிக்கு பின்னர் இன்று 19.03.2022 காலை மண்ணெண்ணெய் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து அதனை பெற்றுக் கொள்ள சுமார் 1000 பேர் வரை நீண்ட வரிசையில் நின்று மண்ணெண்ணெய் பெற்றுக் கொண்டனர்.
அதிகளவிலானவர்களுக்கு மண்ணெண்ணெய் பெற்றுக் கொடுக்க வேண்டி இருப்பதால் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூபா 500ற்கு மாத்திரமே மண்ணெண்ணெய் பெற்றக் கொடுக்கப்பட்டதாக எரிப்பொருள் நிரப்ப நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஹட்டன் பகுதியில் காலை முதல் காணப்பட்ட மழையுடனான காலநியையும் பொருட்படுத்தாது மக்கள் நீண்ட வரிசையில் நின்றதை காணக்கூடியதாக இருந்தது.
தமது ஆதங்கத்தை வெறுப்பை காட்டும் வகையிலையே 'மீண்டும் இந்த அரசுக்கே வாக்கு' என்று மண்ணெண்ணெய்க்காக வரிசையில் நின்ற மக்கள் தெரிவித்தனர்.
மழையையும் பொருட்படுத்தாது தம்மை இவ்வாறு வரிசையில் நிற்க வைத்து போல் ஓர் அரசு கிடைப்பதற்கு தாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் எனவே மக்கள் அனைவரும் இந்த அரசுக்கே வாக்களிக்க வேண்டும் என்று கோபத்தை வெளிப்படுத்தினர். (R)
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026