2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

முதலாம் ஆண்டு நிறைவு விழா

Freelancer   / 2022 நவம்பர் 29 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக அரசியல் அரங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு சிறப்பு உரையரங்கம்   ஹட்டனில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்றது.

ஹட்டன் - டிக்கோயா நகர சபை மண்டபத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மலையக அரசியல் அரங்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தொழிற்சங்க துறவி அமரர். வி.கே வெள்ளையன் அவர்களின் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
 
மூத்த ஊடகவியலாளர் - அரசியல் ஆய்வாளர் விக்டர் ஐவன் நிகழ்நிலை தொழிநுட்பத்தின் ஊடாக உரையாற்றினார்.
 
இதில் சட்டத்தரணி சஞ்சுளா பீட்டர்ஸ், ஹட்டன் - டிக்கோயா நகரசபை உறுப்பினர் எஸ்.கேசவமூர்த்தி உட்பட இளைஞர், யுவதிகள் என பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .