R.Maheshwary / 2022 மே 19 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
கேகாலையிலுள்ள முன்னாள் அமைச்சர்களின் வீடுகளை உடைத்து, சேதம் விளைவித்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஐந்து இளைஞர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தலா ஓர் இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் சந்தேகநபர்களை விடுதலை செய்யுமாறு, கேகாலை நீதவான் வாசனா நவரத்ன உத்தரவிட்டுள்ளார்.
இந்த மாதம் 9ஆம் திகதி இரவு, கேகாலையிலுள்ள முன்னாள் அமைச்சர்களான தாரக பாலசூரிய, கனக ஹேரத் மற்றும் கேகாலை நகர சபையின் தவிசாளர் சமரசிங்க ஆகியோரின் வீடுகளை தாக்கி சேதம் விளைவித்தமை தொடர்பிலேயே குறித்த ஐவரும் 13ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.
13ஆம் திகதியே கேகாலை நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை நேற்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago