2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

முன்னாள் துணைவேந்தர் மீது தாக்குதல்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 11 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 அவரது  இல்லத்திற்கு முன்பாக நேற்று (10) இரவு 10 மணியளவில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடி,  இவ்வாறு  தாக்குதல் நடத்தியதாகவும் இச்சம்பவம்  தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முன்னாள் துணைவேந்தரின் மகன் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் கார் ஒன்று, பல்கலைக்கழக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மாணவர்களின் மோட்டார் சைக்கிள்களை மோதிவிட்டு சென்றதாகவும் இதன்போது அவர் குடிபோதையில் இருந்ததாகத் தெரிவித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 எவ்வாறாயினும், உடனடியாக செயற்பட்ட  பேராதனை பொலிஸார், மாணவர்களை அங்கிருந்து கலைத்துவிட்டு முன்னாள் துணைவேந்தரையும் அவரது மகனையும் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

 இச்சம்பவத்தையடுத்து முன்னாள் துணைவேந்தர் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், அவரது மகன் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .