R.Maheshwary / 2022 மே 30 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
எரிபொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தமது வாகனங்களில் பயணிப்பதை பலர் தவிர்த்து வருவதுடன் சைக்கிளை அன்றாட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் நிலை அதிகரித்து வருகின்றது.
அந்த வகையில் இதற்கு முன்னுதாரணமாக பதுளை மாநகர சபை திகழ்கின்றது.
பதுளை மாநகர சபையின் மேயர் பிரியந்த அமரசறி, நகர ஆணையாளர் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்டவர்கள் தற்போது தமது கடமைகளுக்கு சைக்கிளிலேயே வருவதுடன், ஏனைய அரச அதிகாரிகளுக்கு முன்னுதாரணமான செயற்பாட்டை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பதுளை மாநகர சபையின் மேயர், 21 வருடங்களுக்கு முன்பாக தன்னால் கொள்வனவு செய்யப்பட்ட சைக்கிளை தற்போது பயன்படுத்த தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காலையில் சைக்கிளில் தொழிலுக்குச் செல்லும் போது மகிழ்ச்சியாக உள்ளதுடன் அது உடலுக்கு ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago