Editorial / 2018 மே 07 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்
முப்பது வருட காலமாக, முன்னைய அரசாங்கங்களுடன் கூட்டணி வைத்தவர்கள் செய்ய முடியாத விடயங்ளை, மூன்றே வருடங்களில் இன்றைய அரசாங்கத்துடன் கூட்டணி வைத்துள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணி செய்துள்ளதாக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்
தலவாக்கலை நகரில் இடம்பெற்ற, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும், “கடந்த காலத்தில் நிறத்துக்கு நிறம் மாறி, ஆட்சியமைத்த அரசாங்கங்களுடன், கூட்டணி வைத்தவர்கள் செய்திராத விடயங்களை, நாங்கள் செய்துள்ளோம். இதில் காணி உரிமை, தனி வீடு, மற்றும் நுவரெலியா, அம்பகமுவ பிரதேச சபைகள் அதிகரிப்பு என வரிசை படுத்தலாம். அத்துடன், மலையக அபிவிருத்தி அதிகார சபையையும் உருவாக்கியுள்ளதோடு, நுவரெலியா மாநகர சபையின் பிரதி மேயராக, மலையக தமிழ்பெண்ணை உருவாக்கியுள்ளோம்” என்று குறிப்பிட்ட அவர், “இனி வரும் காலங்களில், யார் ஆட்சியமைப்பதாயினும், அதனை மலையக மக்களின் வாக்குகளே தீர்மானிக்கும் சக்தியாக அமையும்” என மேலும் தெரிவித்தார்
13 minute ago
14 minute ago
34 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
14 minute ago
34 minute ago
3 hours ago