R.Maheshwary / 2022 ஏப்ரல் 18 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
கண்டி பொலிஸ் நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள ஹோட்டலொன்றின் மூன்றாம் மாடியில் ஏற்பட்ட தீபரவல் கண்டி மாநகரசபையின் தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நேற்று (17) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தாண்டு விடுமுறையையொட்டி, குறித்த ஹோட்டல் சில நாள்களாக மூடப்பட்டிருந்ததாகவும் இதன்போது, மூன்றாம் மாடியில் புகை வருவதை அவதானித்த நபர் ஒருவர், கண்டி மாநகரசபையின் தீயணைப்பு படையினருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து தீ ஏனைய இடங்களுக்கு பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை கண்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026