R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா மாவட்ட கலைஞர்களின் வாழ்வாதாரம், அபிவிருத்தி என்பவற்றை நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நுவரெலியா தமிழ் இசைக்கலைஞர்கள் அபிவிருத்தி ஒன்றியம் தனது மூன்றாவது வருட பூர்த்தி விழாவை எதிர்வரும் 27ஆம் திகதி, சனிக்கிழமை ஹட்டன்- டிக்கோயா நகர மண்டபத்தில் கொண்டாடவுள்ளது.
2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ் அமைப்பானது, பல சவால்களுக்கு முகம் கொடுத்து மூன்று வருடத்தை பூர்த்தி செய்கின்றது என ஒன்றியத்தின் செயலாளர் இராமன் கேதீஸ்வரன் தெரித்தார்.
இம்மாதம் 27 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் டிக்கோயா நகர சபை மண்டபத்தில், ஒன்றியத்தின் மூன்றாம் ஆண்டு பூர்த்தி விழாவை ஸ்தாபக தலைவர் பிரபல பாடகர் ராஜ்போரா தலைமையில் நடைப்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் மத அனுஷ்டானங்கள்,அண்மையில் மறைந்த பிராந்திய ஊடகவியலாளர் விஜயரட்னம் மற்றும் பிரபல கீபோட் வாத்திய கலைஞர் , பாடகர் கண்ணா ஆகியோருக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனையுடன் அவர்கள் பற்றிய விவரணம் இடம்பெறவுள்ளது.
இதன்போது கௌரவிப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளதாக ஒன்றியத்தின் செயலாளர் இராமன் கேதீஸ்வரன் தெரித்தார்.
அத்துடன் அன்றைய தினம் புதிய கலைஞர்கள் ஒன்றியத்துடன் இணைந்து கொள்ளும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக தெரிவித்த அவர் சகல கலைஞர்களையும் இந் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
23 minute ago
31 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
42 minute ago