2025 மே 15, வியாழக்கிழமை

மூன்றாவது பிரசவத்தின் பின்னர் தாயொருவர் மரணம்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 14 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

மூன்றாவது குழந்தையைப் பிரசவிப்பதற்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வந்த தாயொருவர் பிரசவத்தின் பின்னர் உயிரிழந்துள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தம்பகல்ல- மரியராவ கங்கோதரகம பகுதியைச் சேர்ந்த 40 வயதான தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த மாதம் 11ஆம் திகதி, மூன்றாவது பிரசவத்திற்காக தம்பகல்ல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மொனராகலை வைத்தியசாலையில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த இவர், அதிக இரத்தப்போக்கு காரணமாக சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குழந்தையின் உடல் நிலையும் மோசமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .