Ilango Bharathy / 2021 ஜூன் 21 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
கொட்டகலை- யதன்சைட் தோட்டத்திலுள்ள 3 குடும்பங்களை தோட்டத்திலிருந்து
வெளியேற்றுமாறு தெரிவித்து, அத்தோட்ட மக்களால் இன்று(21) எதிர்ப்பு நடவடிக்கையொன்று
முன்னெடுக்கப்பட்டது.
யதன்சைட் தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதான ராஜகிரி கார்த்திகேசன் என்ற இளைஞன், இந்த
மாதம் 15ஆம் திகதி கொழும்பு- அத்துருகிரிய பிரதேசத்தில் தாக்குதலுக்கு இலக்காகி கொலை
செய்யப்பட்டிருந்தார்.

குறித்த இளைஞனை தொழிலுக்காக மூவர் அழைத்துச் சென்றதாகவும், அவர்களுக்கும்
கொலையுண்ட இளைஞனுக்கும் இடையில் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட முறுகலே கொலையில் முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே கொலையுடன் தொடர்புடைய இளைஞர்களும் யதன்சைட் தோட்டத்திலே இருப்பதால்,
அவர்களை குடும்பத்தோடு வெளியேற்றுமாறு தெரிவித்தே இன்று (21) போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.
13 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago