R.Maheshwary / 2022 ஜனவரி 11 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
ரம்புக்கனை- பின்னவலயில் உள்ள யானைகள் காப்பகத்தில் புதிதாக பிறந்த 3 யானைக் குட்டிகளுக்கும் பெயர் சூட்டும் நிகழ்வு, இன்று நடைபெற்றது.
,இதற்கமைய குறித்த 3 யானைக் குட்டிகளுக்கும் திசா, சஞ்ஞன மற்றும் நீலமணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதன்போது யானைக் குட்டிகளின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுப் பலகைகள் திறக்கப்பட்டு யானைக்குட்டிகளுக்கு தேன் பருக்கப்பட்டுள்ளது.
மேலும் தாய் யானைக்கு பாற்சோறு மற்றும் பழவகைகளும் சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .