2025 மே 15, வியாழக்கிழமை

மூன்று சிறுத்தைக் குட்டிகள் உயிருடன் மீட்பு

Editorial   / 2023 பெப்ரவரி 10 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பி.கேதீஸ்

தலவாக்கலை, வட்டகொடை தெற்கு மடக்கும்புற தோட்டத்தில் மூன்று சிறுத்தைக் குட்டிகள் நேற்று முன்தினம் (9)  மாலை உயிருடன்  மீட்கப்பட்டுள்ளதாக ஹக்கல வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மூன்று சிறுத்தைக் குட்டிகளும்  தெற்கு மடக்கும்புற தோட்டத்திலிருந்த சீமெந்தினால் கட்டப்பட்ட பழைய நீர்தாங்கி ஒன்றிலிருந்து பிரதேசவாசிகளால்  மீட்கப்பட்டுள்ளன.

வனவிலங்கு அதிகாரிகள் எனக்கூறிக்கொண்டு  அங்கு வந்த  இருவர் இந்த மூன்று சிறுத்தைக் குட்டிகளையும் பல மணி நேரம் உரப்பையில் அடைத்து வைத்திருந்தனர். இச்செயலினால் இந்த மூன்று குட்டிகளும்  உயிர் பிழைத்திருப்பது அதிர்ஷ்டம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். 

இன்னும் சில மணித்தியாலங்கள் உரைப்பைக்குள்ளேயே இருந்திருந்தால் இக்குட்டிகள் உயிரிழந்திருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறான சந்தர்ப்பங்களின்போது  வனவிலங்கு அதிகாரிகளைத் தவிர வேறு எவருக்கும் இவ்வாறான விலங்குகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டாம் என வனவிலங்கு அதிகாரிகள் மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

மீட்கப்பட்ட இந்த மூன்று சிறுத்தைக்குட்டிகளையும் தகுந்த சூழலில் விடுவதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும் என வனவிலங்கு அதிகாரிகள் மேலும்  தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .