Freelancer / 2022 மார்ச் 25 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி - கட்டுகஸ்தோட்டை, மெனிக்கும்புற பகுதியில் நேற்று(24) ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மற்றொரு இளைஞன் ஆகியோர் உயிரிழந்ததுடன், தாய் காயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கட்டுகஸ்தோட்டை, மெனிக்கும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக பிந்திக் கிடைத்த செய்திகளின்படி தந்தை, மகள் மற்றும் அவரது காதலன் ஆகியோர் வீடொன்றினுள் எரித்துக் கொல்லப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மகளின் காதலன் என கூறப்படும் நபரே இந்த தீ வைப்பை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தீ விபத்தில் உயிரிழந்த ஈஸ்வரதேவன் என்பவர் கட்டுகஸ்தோட்டை ரணவன வீதியில் வெற்றிலை வியாபாரம் செய்து வந்துள்ளார்.
பலத்த தீக்காயங்களுக்குள்ளானவர் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் எரிகாயங்களுடன் மரணித்த மகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஒரு சிறிய தகரக்கொட்டில் வீட்டில் அந்தக் குடும்பம் வசித்து வந்ததுள்ளது. கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026