2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மூளைச்சாவு அடைந்தவரின் சடலம் ஹெலியில் வந்தது

Editorial   / 2022 நவம்பர் 01 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம். செல்வராஜா        

பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, மூளைச்சாவு அடைந்த நபரின் சடலத்தை இலங்கை விமானப்படையினர்  கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஹெலிக்கொப்டரின் மூலமாக  அவசரமாக எடுத்துச் சென்றுள்ளனர்.

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான  பெல் 412 ரக ஹெலிக்கொப்டர் அம்புலன்ஸ்களாக மாற்றப்பட்டு, ஒக்டோபர் 31ஆம் திகதியன்று  அவரது சடலம் எடுத்துச் செல்லப்பட்டது.

இலங்கை விமானப்படைக்கும்  சுகாதார அமைச்சுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரமே இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

இந்த மூளைச்சாவு அடைந்த நபரின் முக்கிய உடல் உறுப்புகளை ஏனைய நோயாளர்களுக்கு தானமாக வழங்குவதற்கு, அவரது உடல் அவசரமாகக் கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .